தேசிய செய்திகள்

கொரோனா தொடர்ந்து அதிகரிப்பதால் அரசியல், மத கூட்டங்களுக்கு தடை; மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு + "||" + Struggles are not allowed; Ban on political and religious gatherings as the corona continues to increase; Maharastra CM Uttam Thackeray's announcement

கொரோனா தொடர்ந்து அதிகரிப்பதால் அரசியல், மத கூட்டங்களுக்கு தடை; மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு

கொரோனா தொடர்ந்து அதிகரிப்பதால் அரசியல், மத கூட்டங்களுக்கு தடை; மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
மராட்டியத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசியல், போராட்டம், மத கூட்டங்களுக்கு இன்று முதல் தடை விதித்து முதல்- மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 2 வாரங்களாக அதிகரித்து வருகிறது.

அமராவதியில் ஊரடங்கு
இதனால் நாசிக், புனே உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதேபோல அமராவதி மாவட்டத்தில் ஒரு வாரம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அங்கு இன்று இரவு 8 மணி தொடங்கும் ஊரடங்கு, மார்ச் 1-ந் தேதி காலை 8 மணி வரை அமலில் உள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்கள் கடைகளை திறக்க மட்டுமே அனுமதி 
வழங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பொருட்கள் வாங்க முடியும். இதேபோல அகோலா, வாசிம், புல்தானா, யவத்மால் பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

2-வது கொரோனா அலை

இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று தொலைக்காட்சி மூலமாக பொதுமக்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்றும்(நேற்று) மாநிலத்தில் சுமார் 7 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்திற்கும் கீழ் இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 53 ஆயிரமாக அதிகரித்து உள்ளது. மும்பை, புனேயிலும் பாதிப்பு அதிகரித்து உள்ளது. இது எல்லாம் ஒரு வாரத்தில் நடந்து உள்ளது. இது 
கொரோனா பரவல் 2-வது அலையா என்பது 8 முதல் 15 நாட்களில் தெரியவரும்.

கூட்டம் நடத்த தடை
கொரோனாவுக்கு ஊரடங்கு தீர்வாக இருக்க முடியாது. ஆனால் கொரோனா வைரஸ் சங்கிலியை உடைக்க ஊரடங்கு மட்டுமே வழியாக உள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும். விதிகளை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள். முககவசம் மட்டும் தான் கொரோனா வைரசில் இருந்து நம்மை காக்கும் ஆயுதம். முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், சுய ஒழுக்கத்தை கடைப்பிடித்தல் ஊரடங்கை தவிர்க்க உதவும். மீண்டும் ஊரடங்கு வேண்டும் என நினைப்பவர்கள் முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றலாம். அடுத்த சில நாட்களுக்கு அரசியல் போராட்டங்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் மத, சமூக, அரசியல் கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பாதிப்பு நிலவரம்
மாநிலத்தில் நேற்று புதிதாக 6 ஆயிரத்து 971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 884 ஆக அதிகரித்து இருக்கிறது. இதில் 19 லட்சத்து 94 ஆயிரத்து 947 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 52 ஆயிரத்து 956 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மேலும் 35 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை 51 ஆயிரத்து 788 பேர் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர்.

தலைநகர் மும்பையில் புதிதாக 921 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 4 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை நகரில் 3 லட்சத்து 19 ஆயிரத்து 128 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 ஆயிரத்து 442 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 56 நாட்களுக்கு பிறகு அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 489 பேருக்கு தொற்று
தமிழகத்தில் 56 நாட்களுக்கு பிறகு நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது சென்னை உள்பட 6 மாவட்டங்களில் தொற்று குறையவில்லை
கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது சென்னை உள்பட 6 மாவட்டங்களில் தொற்று குறையவில்லை சுகாதாரத்துறை செயலாளர் தகவல்.
3. அமீரகத்தில், ஒரே நாளில் கொரோனாவால் 2,692 பேர் பாதிப்பு
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4. அரியலூரில் 3 பேருக்கு கொரோனா
அரியலூரில் 3 பேருக்கு கொரோனா
5. மேலும் 2 பேருக்கு கொரோனா
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.