மேற்கு வங்காளத்தில் 3 நாட்களில் 200க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 Feb 2021 11:10 PM GMT (Updated: 21 Feb 2021 11:10 PM GMT)

மேற்கு வங்காளத்தில் 3 நாட்களில் 200க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்துள்ளன.

கொல்கத்தா, 

மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டத்தில் பிஷ்ணுபூர் நகரில் மூன்று நாட்களில் 200-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இறந்துள்ளன, இதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை 60 நாய்கள் இறந்ததாகவும், புதன்கிழமை 97 நாய்கள் இறந்ததாகவும், வியாழக்கிழமை 45 நாய்கள் இறந்ததாகவும கூறப்படுகிறது,

இந்த நிலையில், கொல்கத்தாவிலும் இருவார காலத்திற்குள் 72க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்டுத்தி உள்ளது. தற்போது இறந்த நாய்களில் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக கொல்கத்தாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த நேரத்தில் நாய்கள் பொதுவான ஒரு வைரஸ் தொற்று காரணமாக அவைகள் இறந்திருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். மனிதர்களுக்கோ அல்லது பிற விலங்குகளுக்கோ இவை பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லாததால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story