பெட்ரோல் விலை உயர்வு குறித்து மத்திய அரசின் மீது அகிலேஷ் யாதவ் கடும் விமர்சனம்


பெட்ரோல் விலை உயர்வு குறித்து மத்திய அரசின் மீது அகிலேஷ் யாதவ் கடும் விமர்சனம்
x
தினத்தந்தி 21 Feb 2021 11:11 PM GMT (Updated: 21 Feb 2021 11:11 PM GMT)

பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், பா.ஜனதா மீது கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.

புதுடெல்லி,

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொட்டுள்ளது. விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், இதுவரை 70 ஆண்டுகள் நடக்காததை, பா.ஜனதா ஒரே ஆண்டில் நடத்தி காட்டியுள்ளது என்று அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில் ‘‘பா.ஜனதா ஆட்சியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது. உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மாவட்ட கோராக்பூரின் பகுதியில் உள்ள மக்கள் எரிபொருள் வாங்க நேபாளத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

எல்லாவற்றையும் குறைப்போம் என மக்களிடம் கூறி வாக்கு வங்கிய பின்னர், பா.ஜனதா ஏன் பணவீக்கத்தை பற்ற வைக்கிறார்கள். 70 ஆண்டுகளில் நடைபெறாததை, பா.ஜனதா இந்த ஒரே ஆண்டில் நடத்தியுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Next Story