குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Feb 2021 12:27 AM GMT (Updated: 22 Feb 2021 12:27 AM GMT)

குஜராத்தில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.

அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி 6 மாநகராட்சிகளில் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதன்படி அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் பாவ் நகர் மாநகராட்சிகளில் நேற்று வாக்குபதிவு நடைபெற்றது. கடந்த பல ஆண்டுகளாக இந்த மாநகராட்சிகள் பாஜவிடம் இருந்து வருகிறது. 

6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இது தவிர ஜூனாகத் மாநகராட்சியில் நடக்கும் 2 இடங்களுக்காக நடக்கும் இடைத்தேர்தலில் 9 பேர் போட்டியிட்டனர்.  

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அகமதாபாத், மாநகராட்சிக்கு உட்பட்ட நரன்புரா பகுதிவாக்குப்பதிவு மையத்தில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். மாநில முதல்வர் விஜய்ருபானி தனது மனைவியுடன் ராஜ்கோட் வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார். வாக்குகள் எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. 

முன்னதாக குஜராத் மாநில தேர்தல் ஆணையத்தின் (எஸ்.இ.சி) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ஆறு நகராட்சி நிறுவனங்களும் சராசரியாக 43% வாக்குகளைப் பெற்றுள்ளன. எந்தவொரு பெரிய அசம்பாவிதமும் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாக முடிந்துவிட்டது என்று மாநில தேர்தல் ஆணையர் சஞ்சய் பிரசாத் தெரிவித்தார்.


Next Story