தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,199 பேருக்கு கொரோனா தொற்று + "||" + India reports 14,199 new #COVID19 cases, 9,695 discharges, and 83 deaths in the last 24 hours, as per Union Health Ministry

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,199 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,199 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,05,850 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,56,385 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 9,695 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,06,99,410 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 1,50,055 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 1,11,16,854 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு எதிரான போரில் ‘உலகளாவிய தலைவர், இந்தியா’; ஐ.நா. சபை பாராட்டு
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியாவின் தலைமைக்கும், கொரோனா வைரஸ் தடுப்பூசி உதவிக்கும் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2. இந்தியா-மாலத்தீவு இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து
இந்தியா-மாலத்தீவு இடையே ரூ.362 கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
3. புனேவில் இரவு நேர ஊரடங்கு அமல், கல்வி நிலையங்கள் பிப்.28-வர மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
மராட்டிய மாநிலம் புனேவில் கடந்த 24 மணி நேரத்தில் 849- பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
4. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 14,264 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,264 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல் பல்கலைக்கழகம்; கேரளாவில் திறப்பு
நாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது.