கேரளாவுடனான எல்லைகளில் கட்டுப்பாடுகளை அதிகரித்தது கர்நாடகா + "||" + Karnataka makes negative RT-PCR report mandatory for people arriving from Maharashtra
கொரோனா எதிர்மறை சான்றிதழ்கள் உள்ளவர்களுக்கு மட்டும் எல்லையில் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
பெங்களூரு,
கேரளா, மராட்டிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதனால், இந்த மாநிலங்களுடனான எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் கர்நாடகா, அம்மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளது. மராட்டியத்தில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என அண்மையில் புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது.
இந்த நிலையில், கேரளாவுடனான எல்லைகளிலும் கர்நாடக மாநிலம் கெடுபிடிகளை அதிகரித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட பல சாலைகளை கர்நாடக அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கொரோனா எதிர்மறை சான்றிதழ்கள் உள்ளவர்களுக்கு மட்டும் எல்லையில் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
எனவே, எல்லைப்பகுதியில் இன்று காலையிலிருந்து நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றபடியே உள்ளனர். இதற்கிடையே கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிராக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.