தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: 68 உடல்கள் இதுவரை மீட்பு + "||" + Uttarakhand flash flood: A total of 68 bodies found so far, of these 39 have been identified and 29 are yet to be identified

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: 68 உடல்கள் இதுவரை மீட்பு

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: 68 உடல்கள் இதுவரை மீட்பு
உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களில் இன்னும் 136- பேரை கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
டோராடூன்,

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தின் ஜோஷிடம் அருகே நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி கடந்த 7-ந் தேதி திடீரென உடைந்ததால் பெரும் பனிச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால் அலெக்நந்தா ஆற்றில் பெரும் பிரளயமே ஏற்பட்டது. 

இதனால் அங்கு அமைக்கப்பட்டிருந்த ரிஷிகங்கா நீர்மின் நிலையம் முற்றிலுமாக அடித்துச்செல்லப்பட்டது. மேலும் தபோவன்-விஷ்ணுகாட் அனல்மின் நிலைய சுரங்கங்கள் சேதமடைந்தன. இதனால் அங்கு பணியாற்றி வந்த நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதுடன், சுரங்கங்களிலும் சிக்கிக்கொண்டனர்.

இந்த பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை ராணுவம், தேசிய-மாநில பேரிடர் மீட்புப்படை என மிகப்பெரும் மீட்புக்குழுவினர் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இரவு-பகலாக மேற்கொண்டு வருகின்றனர். இதில் உயிருடன் இருந்தவர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மீட்புப் பணி நிலவரத்தின் சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை மொத்தம் 68 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 39 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 29 உடல்கள் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 136 பேர் இன்னும் கண்டறியப்படவில்ல. அந்தப் பகுதிகளில் மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. உத்தரகாண்டில் ஜூன் 1-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
உத்தரகாண்டில் ஜூன் 1-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
2. உத்தரகாண்ட் மாநிலத்தில் மே 11 முதல் முழு ஊரடங்கு அமல்
உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் மே 11 முதல் 18 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
3. உத்தரகண்டில் பனிச்சரிவு: 384 பேர் மீட்பு, 8- பேர் சடலங்களாக மீட்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
4. உத்தரகாண்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி - முதல்வர் தீரத் சிங் ராவத் தகவல்
உத்தரகாண்ட் மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என அந்த மாநிலத்தின் முதல்வர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார்.
5. உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா
உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.