மாநிலங்களவை தேர்தல்: குஜராத்தில் 2 இடங்களையும் பாஜக கைப்பற்றியது


மாநிலங்களவை தேர்தல்: குஜராத்தில் 2 இடங்களையும் பாஜக கைப்பற்றியது
x
தினத்தந்தி 22 Feb 2021 5:05 PM GMT (Updated: 22 Feb 2021 5:05 PM GMT)

குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் 2 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்

அகமதாபாத்,

குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் 2 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 

குஜராத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலும், பாஜக எம்.பி. அபய் பரத்வாஜும் அண்மையில் மரணமடைந்தனர். அகமது படேலுக்கு 2023-ம் ஆண்டு வரையிலும், பரத்வாஜுக்கு 2026 வரையிலும் பதவிக்காலம் இருந்தது. அதற்கு முன்பே அவர்கள் மரணமடைந்ததால் அந்த இரு இடங்கள் காலியாகின. 

காலியான 2 இடங்களுக்க்கும்  மார்ச் 1 ஆம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  பாஜக சார்பில் இரண்டு இடங்களுக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் தரப்பில் யாரும் நிறுத்தப்படவில்லை. இதனால், இரு இடங்களையும் பாஜக போட்டியின்றி கைப்பற்றியது. இதன்படி,  தினேஷ் அனவாடியாவும், ராம்பாய் மொக்ரியாவும் மாநிலங்களவை எம்.பியாக தேர்வாகின்றனர்.

Next Story