தேசிய செய்திகள்

"குழந்தைகள் தான் நாட்டின் எதிர்காலம்" மலப்புரத்தில் ராகுல்காந்தி குழந்தைகளுடன் கலந்துரையாடினார். + "||" + In Malappuram, Rahul Gandhi discussed with the children.

"குழந்தைகள் தான் நாட்டின் எதிர்காலம்" மலப்புரத்தில் ராகுல்காந்தி குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

"குழந்தைகள் தான் நாட்டின் எதிர்காலம்"  மலப்புரத்தில்  ராகுல்காந்தி குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
கேரள மாநிலம் மலப்புரத்தில் ராகுல்காந்தி குழந்தைகளுடன் கலந்துரையாடினார். பின்னர்"குழந்தைகள் தான் நாட்டின் எதிர்காலம்" என கூறினார்.
மலப்புரம்

கேரள மாநிலம் மலப்புரத்தில் இரண்டு குழந்தைகளுடனும் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அதன்பிறகு அவர் கூறுகையில், " குழந்தைகள் தான் நாட்டின் எதிர்காலம். ஒருவர் மருத்துவர் ஆக விரும்புகிறார். மற்றொருவர் பெண் காவலர் ஆக விரும்புகிறார். நலிவுற்றவர்களையும், ஏழைகளையும் பாதுகாப்பதற்காக பெண் காவலர் ஆக வேண்டும் என அவர் விரும்புகிறார். ஏழைகளுக்கு சொந்தமானதை அபகரித்துக்கொள்ள அவர் விரும்பவில்லை என கூறினார் 

 மலப்புரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசும் போது கூறியதாவது:-

ரெயில்வே துறை நாட்டின் ஒரு அங்கம். அது எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. ஒட்டுமொத்த நாட்டுக்கும் சொந்தம். லட்சக்கணக்கான மக்கள் ரெயில்வே மூலம் குறைந்த விலையில் பயணம் செய்கின்றனர்.ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் அரசின் நோக்கத்தை கடந்த பட்ஜெட்டில்  கவனித்தேன். 

ரெயில்வேவைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான ஏழைகளுக்கு இது அச்சுறுத்தல்.ரெயில்வேயில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கும் இது பிரச்சினையை உண்டாக்கும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசே ‘இந்த செய்தி உங்களுக்குத்தான்’ - ராகுல் காந்தி டுவிட்
மத்திய அரசை இந்த செய்தி உங்களுக்கு தான் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார்.
2. தடுப்பூசியின் விலை நிர்ணயத்தில் வேறுபாடு - ராகுல் காந்தி
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியின் விலை நிர்ணயத்தில் வேறுபாடு இருப்பதை காங்கிரஸ் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
3. மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்: ராகுல் காந்தி பிரசாரம் திடீர் ரத்து
மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திடீரென ரத்து செய்துள்ளார்.
4. தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் சூழலில் ‘தடுப்பூசி திருவிழா ஒரு கேலிக்கூத்து’ - ராகுல் காந்தி சாடல்
தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் சூழலில் நடத்தப்பட்ட தடுப்பூசி திருவிழா ஒரு கேலிக்கூத்து என மத்திய அரசை ராகுல் காந்தி சாடியுள்ளார்.
5. மேற்கு வங்காள தேர்தல்: ஏப்.14 முதல் ராகுல் காந்தி தீவிர பிரசாரம்
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 92 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.