மராட்டிய பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம்; மத்திய பிரதேச அரசு அறிவிப்பு


மராட்டிய பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம்; மத்திய பிரதேச அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Feb 2021 8:42 PM GMT (Updated: 22 Feb 2021 8:42 PM GMT)

மராட்டியத்தில் இருந்து வருபவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் என மத்திய பிரதேச அரசு அறிவித்து உள்ளது.

புனே,

மராட்டியத்தில் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த ஞாயிற்று கிழமை 6,971 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.  இந்த எண்ணிக்கை உயர்வால், அதனை ஒட்டிய மத்திய பிரதேசத்தில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, மராட்டியத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயம் என மத்திய பிரதேச அரசு அறிவித்து உள்ளது.  இதுபற்றி உள்துறை வெளியிட்ட உத்தரவில், போபால், இந்தூர், சிந்த்வாரா உள்ளிட்ட மராட்டிய எல்லையையொட்டிய மாவட்ட ஆட்சியர்கள் கொரோனா மேலாண் கூட்டங்களை நடத்தும்படியும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

மராட்டியத்தில் இருந்து மத்திய பிரதேசத்திற்கு வரவிருக்கிற காலங்களில் திருவிழாக்களில் கலந்து கொள்வதற்காக அதிக அளவில் பக்தர்கள் திரள கூடும்.  இதனை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Next Story