தேசிய செய்திகள்

மராட்டிய மந்திரி சகன் புஜ்பாலுக்கு கொரோனா + "||" + Maharashtra Minister Chhagan Bhujbal Tests Positive For Coronavirus

மராட்டிய மந்திரி சகன் புஜ்பாலுக்கு கொரோனா

மராட்டிய மந்திரி சகன் புஜ்பாலுக்கு கொரோனா
மராட்டிய மந்திரி சகன் புஜ்பாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் பாதிக்கப்பட்ட 7-வது மந்திரி இவர் ஆவார்.
சகன் புஜ்பால் பாதிப்பு
மராட்டியத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மந்திரிகள் உள்ளிட்ட பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே, நீர்வளத்துறை மந்திரி ஜெயந்த் பாட்டீல், மந்திரிகள் சதேஜ் பாட்டீல், ராஜேந்திர சிங்னே, பச்சு கடு ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஏக்நாத் கட்சேவும் தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான சகன் புஜ்பாலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

உடல் நலத்துடன் உள்ளேன்
இதுகுறித்து தகவலை அவர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். அதில் அவர், "எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் நல்ல உடல் நலத்துடன் உள்ளதால் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் சோதனை செய்து கொள்ளவும். எல்லோரும் கவனமாக இருக்கவும். முககவசம், சானிடைசரை பயன்படுத்துங்கள்" என கூறியுள்ளார்.

மாநிலத்தில் இதுவரை துணை முதல்-மந்திரி அஜித்பவார் உள்பட 20-க்கும் மேற்பட்ட மந்திரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், இதில் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து இந்த மாதத்தில் மட்டும் 7 மந்திரிகளை தொற்று தாக்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,239 பேருக்கு கொரோனா
சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,42,356 ஆக அதிகரித்துள்ளது.
2. பெங்களூருவில் மேலும் 51 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
பெங்களூருவில் இதுவரை 1,094 போலீசார் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
3. ஜம்போ சிகிச்சை மையங்களை அகற்றாமல் இருந்தது 2-வது கொரோனா அலையை எதிர்கொள்ள உதவியது; மும்பை மாநகராட்சி தகவல்
ஜம்போ சிகிச்சை மையங்களை அகற்றாமல் இருந்தது மும்பையில் 2-வது கொரோனா அலையை எதிர்கொள்ள உதவியாக இருந்ததாக மாநகராட்சி கூறியுள்ளது.
4. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,154 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,154 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
5. கொரோனா வைரஸ் சூழல் படுமோசமாக செல்கிறது; பிரதமரும், சுகாதார துறை மந்திரியும் பொறுப்பேற்க மறுக்கிறார்கள்; ப.சிதம்பரம் சாடல்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் சூழல் மோசத்திலிருந்து படுமோசமான நிலைக்கு சென்றுவிட்டது.