தேசிய செய்திகள்

ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் மே 15-ந் தேதி விசாரணை + "||" + Hearing in defamation case against Rahul Gandhi on May 15

ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் மே 15-ந் தேதி விசாரணை

ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் மே 15-ந் தேதி விசாரணை
ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் மே 15-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
தானே,  

கடந்த 2014-ம் ஆண்டு தானேயில் உள்ள பிவண்டியில் ஒரு பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், "மகாத்மா காந்தியை கொலை செய்ததற்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் இருந்தது" என குற்றம்சாட்டினார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக ராகுல் காந்திக்கு எதிராக பிவண்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜேஷ் குந்தே அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு கோர்ட்டில் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். அப்போது ராகுல் காந்தி தரப்பில் கூறுகையில், "ராகுல் காந்தி எந்த தவறும் செய்யவில்லை. இந்தக் குற்றச்சாட்டு புனையப்பட்டுள்ளது விசாரணைக்கு உகந்தது அல்ல" எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மாஜிஸ்திரேட் ஜே.வி. பாலிவால் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது ராகுல் காந்தியின் வக்கீல் நாராயண் அய்யர் வாதிடுகையில், கொரோனா வைரஸ் பரவல் இருப்பதால், ராகுல்காந்தி கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரினார். இதற்கு நீதிபதி சம்மதம் தெரிவித்தார். மனுதாரர் ராஜேஷ் குந்தேயின் வக்கீல் பி.பி.ஜெய்வந்த், சில ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால், இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரினார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் மே 15-ம் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு பாலிவால் ஒத்தி வைத்து உத்தரவிட்டார். அன்றைய தினம் மனுதாரரின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கருப்பு பூஞ்சை தொற்றுநோய் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் - ராகுல் காந்தி கேள்வி
கருப்பு பூஞ்சை தொற்றுநோய் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
2. ‘யாஸ்’ புயலால் பாதிக்கப்படுபவர்களுக்கு காங்கிரசார் உதவ ராகுல்காந்தி வேண்டுகோள்
‘யாஸ்’ புயல் இன்று ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கரையை கடக்கிறது.
3. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி முக்கியம்: ராகுல்காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.
4. 'முதலைகள் அப்பாவிகள்’ - பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி கடும் விமர்சனம்
'இந்திய பிரதமர் கண்ணீர் விட்டார்’ என்று முதலையின் புகைப்படத்துடன் அமெரிக்காவின் பிரபல செய்தித்தாளான நியூயார்க் டைம்ஸ் இதழில் செய்தி வெளியானதாக சமூகவலைதளத்தில் புகைப்படங்கள் பரவி வந்தன.
5. குழந்தைகளை கொரோனாவில் இருந்து பாதுகாக்க, மோடி நிர்வாகத்தை தூக்கத்தில் இருந்து எழுப்புவது அவசியம்; ராகுல்காந்தி கருத்து
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அதிகம் வாசிக்கப்பட்டவை