தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுகள்: இன்று தொடக்கம் + "||" + JEE Main 2021 first phase from today

நாடு முழுவதும் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுகள்: இன்று தொடக்கம்

நாடு முழுவதும் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுகள்: இன்று தொடக்கம்
நாடு முழுவதும் 2021-ம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது.
புதுடெல்லி,

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இவை ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ்டு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.

இந்த ஆண்டு ஜேஇஇ மெயின் 2021 தேர்வு ஆண்டுக்கு 4 முறை ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் 23ம் தேதி (இன்று) முதல் 26ஆம் தேதி வரை தேர்வு நடைபெறம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெற உள்ளது.

இதன்படி கட்டிடவியலுக்கான இளங்கலைப் படிப்பும் வடிவமைப்புக்கான இளங்கலைப் படிப்புக்கான தேர்வும் இன்று தொடங்கி இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காகத் தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்த தேர்வுக்காக ஹால்டிக்கெட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா பாதிப்புகள் குறித்த சுய உறுதிமொழிக் குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நீலகிரி, கோவை, சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
நீலகிரி, கோவை, சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
2. கோவை, திண்டுக்கல் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வளிமண்டல சுழற்சி காரணமாக கோவை, திண்டுக்கல் உள்பட 7 மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. புதுச்சேரியில் இன்று சட்டசபை தேர்தல்: 30 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு
புதுச்சேரி சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது. இதில் அங்குள்ள 30 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது.
4. கேரளாவில் இன்று சட்டசபை தேர்தல்: மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு
கேரளாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதேநேரம் மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
5. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ள இடங்கள் விவரம்
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ள இடங்கள் விவரம் பின்வருமாறு:-