தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மகள் எம்.எல்.சி. ஆகிறார் + "||" + Former Prime Minister Narasimha Rao's daughter MLC Is

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மகள் எம்.எல்.சி. ஆகிறார்

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மகள் எம்.எல்.சி. ஆகிறார்
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மகள் வாணி தேவி தெலுங்கானாவில் இருந்து எம்.எல்.சி. ஆகிறார்.
ஐதராபாத்,

தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியின் விலங்குகள் நல மந்திரி தலசனி ஸ்ரீனிவாச யாதவ் கூறும்பொழுது, முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மகள் வாணி தேவி கல்வியாளராகவும் மற்றும் சமூக சேவை செய்பவராகவும் இருந்து வருகிறார்.

நாட்டின் வளர்ச்சி பணிகளில் பங்கு கொண்ட நரசிம்ம ராவுக்கு மரியாதை அளிக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக அவரது பிறந்த நாளை கட்சி கொண்டாடி வருகிறது.

காங்கிரசின் மூத்த தலைவரான அவரது மறைவுக்கு பின்னர் எந்தவொரு கட்சியும் அவருக்கு மரியாதை அளிக்கவில்லை.  ஆனால் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் அவரை மறக்கவில்லை.  அவரது மகளை எம்.எல்.சி. வேட்பாளராக கட்சி நிறுத்தியுள்ளது.  அதற்கு தகுதியானவர் அவர் என்று கூறியுள்ளார்.