குஜராத் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்


குஜராத் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
x
தினத்தந்தி 23 Feb 2021 3:22 AM GMT (Updated: 23 Feb 2021 3:22 AM GMT)

குஜராத் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் பாவ் நகர் ஆகிய 6 மாநகராட்சிகளில் கடந்த 21 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. கடந்த பல ஆண்டுகளாக இந்த மாநகராட்சிகள் பாஜவிடம் இருந்து வருகிறது. 

6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இது தவிர ஜூனாகத் மாநகராட்சியில் நடக்கும் 2 இடங்களுக்காக நடக்கும் இடைத்தேர்தலில் 9 பேர் போட்டியிட்டனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. 

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அகமதாபாத், நரன்புரா பகுதி வாக்குப்பதிவு மையத்தில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். மாநில முதல்வர் விஜய்ருபானி தனது மனைவியுடன் ராஜ்கோட் வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார். 

குஜராத் மாநில தேர்தல் ஆணையத்தின் (எஸ்.இ.சி) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ஆறு நகராட்சி நிறுவனங்களும் சராசரியாக 43% வாக்குகளைப் பெற்றுள்ளன. இந்த நிலையில் இன்று 6 மாநகராட்சிகளிலும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Next Story