தேசிய செய்திகள்

கர்நாடகா கல்குவாரி வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழப்பு - விசாரணை நடத்த முதல்வர் எடியூரப்பா உத்தரவு + "||" + 6 killed in Karnataka quarry blast: Chief Minister Eduyurappa orders probe

கர்நாடகா கல்குவாரி வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழப்பு - விசாரணை நடத்த முதல்வர் எடியூரப்பா உத்தரவு

கர்நாடகா கல்குவாரி வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழப்பு - விசாரணை நடத்த முதல்வர் எடியூரப்பா உத்தரவு
கர்நாடக மாநிலத்தில் நேற்று இரவு கல்குவாரியில் வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 6 பேர் உயிரிழந்ததுள்ளனர்.
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம் ஹிரெனகவல்லி பகுதியில் உள்ள கல் குவாரியில், நேற்று இரவு பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கல்குவாரியில் வெடித்தது சட்டவிரோதமாக வாங்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் என்றும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்க கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், இது குறித்து விசாரணையை தீவிரப்படுத்த அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

எடியூரப்பாவின் சொந்த ஊரான சிவமோகாவில் உள்ள கல்குவாரி ஒன்றில், கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நடந்த வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு - எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகாவில் அமலில் உள்ள ஊரடங்கு வருகிற 14-ந் தேதி வரை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று அறிவித்தார்.
2. கர்நாடகாவில் இன்று புதிதாக 18,324 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 18,324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கர்நாடகாவில் இருந்து மதுபானம் கடத்தல் - ஓடும் ரயிலில் 4 பேர் கைது
பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டிற்கு மதுபானம் கடத்திய நான்கு பேரை சேலத்தில் ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
4. கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மருத்துவமனையில் அனுமதி
கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5. கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது
கர்நாடகாவில் இன்று 14,304 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.