கொரோனா பாதிப்பு: சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் பஞ்சாப் முதல்-மந்திரி இன்று ஆலோசனை


கொரோனா பாதிப்பு: சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் பஞ்சாப் முதல்-மந்திரி இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 23 Feb 2021 7:30 AM GMT (Updated: 23 Feb 2021 7:30 AM GMT)

பஞ்சாப்பில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங் இன்று ஆலோசனை நடத்த உள்ளார் .

பஞ்சாப்,

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா தான் இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இதனால் மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். 

இதனிடையே கடந்த சில நாட்களாக இந்தியாவில் மராட்டியம், கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது. இதனால் அந்தெந்த மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் பஞ்சாப்பில் கொரோனா பாதிப்பு குறித்து முதல்-மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங் சுகாதார நிபுணர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எந்தெந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story