தேசிய செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம் + "||" + Mangu Hanumantha Rao has been appointed as the Managing Director of AIIMS Hospital, Madurai

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,

மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 4 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனர்களை நியமினம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்திற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருப்பதியில் உள்ள எஸ்.வி. மருத்துவ கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார். 

இதே போல் ஜம்மு காஷ்மீரில் உள்ள விஜய்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை, குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனை, இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றுக்கும் புதிய நிர்வாக இயக்குனர்களை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாநிலங்களவை எம்.பி. ஒருவரை உறுப்பினராக நியமிக்கும் தீர்மானத்திற்கு அவையில் ஒப்புதல்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாநிலங்களவை எம்.பி. ஒருவரை உறுப்பினராக நியமிக்கும் தீர்மானத்திற்கு மாநிலங்களவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
2. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் - மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு உறுதி
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 223 ஏக்கர் நிலம் ஒப்படைத்துள்ளதாக தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் தெரிவித்தது. மேலும் நிதி கிடைத்த 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது.
3. மதுரை எய்ம்ஸ் தலைவராக டாக்டர் வி.எம்.கட்டோச் நியமனம் மத்திய அரசு அறிவிப்பு
மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.எம்.கட்டோச் நியமிக்கப்பட்டுள்ளார்.
4. மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் யார்? மத்திய அரசு அறிவிப்பு
மதுரை அருகே உள்ள தோப்பூரில் ரூ. 1264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.