டூல் கிட் வழக்கில் திஷா ரவிக்கு நிபந்தனை ஜாமீன் - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு


டூல் கிட் வழக்கில் திஷா ரவிக்கு நிபந்தனை ஜாமீன் - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 23 Feb 2021 11:02 AM GMT (Updated: 23 Feb 2021 11:02 AM GMT)

டூல் கிட் வழக்கில் திஷா ரவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி, 

டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பான ”டுல் கிட்” வழக்கில் சூழலியல் ஆர்வலர் திஷா ரவி (21) கடந்த 13-ம் தேதி பெங்களூருவில் வைத்து டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் 5 நாள்கள் நீதிமன்றக் காவல் வைக்கப்பட்டார். 

இதையடுத்து, உடன் குற்றம்சாட்டப்பட்டவர்களான நிகிதா ஜேக்கப் மற்றும் ஷாந்தனு முலக் ஆகியோர் பிப்ரவரி 22-ம் தேதி விசாரணை ஆஜராகும்போது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க கோருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீதிமன்றக் காவல் மேலும் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டன. இதற்கு இடையில் நேற்று அவரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதியளித்தது.  

இந்த நிலையில் ஒருநாள் போலீஸ் காவல் முடிந்ததும் இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் திஷா ரவி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து திஷா ரவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு நபர் உத்தரவாதத்துடன் தலா ரூ.1 லட்சம்  செலுத்த உத்தரவிட்டுள்ளது. 


Next Story