தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு + "||" + Maharashtra reports 6218 new #COVID19 cases, 5869 recoveries and 51 deaths in the last 24 hours.

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

மராட்டியத்தில்  கொரோனா பாதிப்பு  தொடர்ந்து அதிகரிப்பு
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அது 6 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதன்படி நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 971 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் சற்று ஆறுதல் தரும் செய்தியாக 3 நாட்களுக்கு பிறகு நேற்று கொரோனா பாதிப்பு மீண்டும் 6 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதாவது புதிதாக 5 ஆயிரத்து 210 பேர் பாதிப்புக்கு ஆளானார்கள். இந்த நிலையில், மராட்டியத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. அம்மாநிலத்தில் இன்று  6,218- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால்  51- பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 5,869- ஆக உள்ளது. 

மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்து 12 ஆயிரத்து 312- ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 05 ஆயிரத்து 851- ஆக இருக்கிறது. தொற்று பாதிப்புடன்  53,409- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,584 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியம் உள்பட 5 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு பற்றி அமித்ஷா ஆலோசனை; சுகாதாரத்துறை மந்திரி, அதிகாரிகள் பங்கேற்பு
மராட்டியம் உள்பட 5 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்தது பற்றி அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அதில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,199 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க பொது மக்களே காரணம் - சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றச்சாட்டு
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க பொது மக்களே காரணம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
5. மராட்டியத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியது
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.