புதுச்சேரி:காங்கிரஸ் ஆட்சியை இழந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க விரும்பவில்லை;ஜனாதிபதி ஆட்சிக்கு வாய்ப்பு?


புதுச்சேரி:காங்கிரஸ் ஆட்சியை இழந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க விரும்பவில்லை;ஜனாதிபதி  ஆட்சிக்கு வாய்ப்பு?
x

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க விரும்பவில்லை;ஜனாதிபதி ஆட்சிக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்காததால் கவிழ்ந்தது. இதனிடையே, புதிய அரசு அமைக்க எதிர்கட்சிகள் உரிமை கோரவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வுகளை முழுமையாக வீடியோவில் பதிவு செய்து சட்டசபை செயலர் கவர்னருக்கு  அறிக்கை அனுப்பி உள்ளார். 

இதன் மூலம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, கவர்னர்  தமிழிசை அறிக்கை அனுப்புவார் என்றும், ஜனாதிபதி  ஆட்சியை அமல்படுத்த அவர் பரிந்துரைப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.  அரசிதழில் செய்தி வெளியிடபட்டது.

Next Story