தேசிய செய்திகள்

டெல்லியில் உள்ள சர்தார் படேல் கொரோனா சிகிச்சை மையம் அடுத்தவாரம் மூடப்படுகிறது + "||" + Sardar Patel COVID Care Centre to be closed by next week due to patient numbers going down: ITBP DG

டெல்லியில் உள்ள சர்தார் படேல் கொரோனா சிகிச்சை மையம் அடுத்தவாரம் மூடப்படுகிறது

டெல்லியில் உள்ள சர்தார் படேல் கொரோனா சிகிச்சை மையம்  அடுத்தவாரம் மூடப்படுகிறது
டெல்லியில் உள்ள சர்தார் படேல் கொரோனா சிகிச்சை மையம் அடுத்த வாரம் மூடப்பட உள்ளது.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் நாட்டின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் உள்ளது. லேசான மற்றும் மிதமான அறிகுறிகளுடன் கூடிய கொரோனா நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் கொரோனா பாதிப்பு கணிசமாக சரிந்ததால், இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. 

இதையடுத்து,  சர்தார் படேல் கொரோனா சிகிச்சை மையத்தை  மூட உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் குணம் அடைந்ததும், அடுத்த வாரம் சிகிச்சை மையம் மூடப்படும் என்று  இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை தெரிவித்துள்ளது.