தேசிய செய்திகள்

டெல்லி செங்கோட்டை முற்றுகை வழக்கு: நடிகர் தீப் சித்துக்கு 14 நாள் நீதிமன்ற காவல் - டெல்லி கோர்ட் உத்தரவு + "||" + Red Fort violence: Delhi court sends Deep Sidhu to 14-day judicial custody

டெல்லி செங்கோட்டை முற்றுகை வழக்கு: நடிகர் தீப் சித்துக்கு 14 நாள் நீதிமன்ற காவல் - டெல்லி கோர்ட் உத்தரவு

டெல்லி செங்கோட்டை முற்றுகை வழக்கு: நடிகர் தீப் சித்துக்கு 14 நாள் நீதிமன்ற காவல் - டெல்லி கோர்ட் உத்தரவு
டெல்லி செங்கோட்டை முற்றுகை வழக்கில், நடிகர் தீப் சித்துக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து டெல்லி கோர்ட் உத்தரவிட்டது.
புதுடெல்லி, 

வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. செங்கோட்டை மீது ஏறிய ஒரு கும்பல், அங்கு மத கொடிகளை ஏற்றியது. போலீசாரை தாக்கியது.

இதில், நூற்றுக்கணக்கான போலீசார் காயமடைந்தனர். இந்த வன்முறையை தூண்டி விட்டதாக நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டார். அவரை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அவரது போலீஸ் காவல் முடிவடைந்ததால், நேற்று அதே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து நடிகர் தீப் சித்துவை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் சமர்ஜீத் கவுர் உத்தரவிட்டார். முன்னதாக தீப் சித்து மீது வன்முறை, கொலைக்கு முயற்சி செய்தல், கிரிமினல் சதி உள்பட பல பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கடலில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மீன் பிடிப்பதற்கு சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி கேட்ட வழக்கு தள்ளுபடி
கடலில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
2. மராட்டியத்தில் இருந்து வந்த பயணிகளின் கொரோனா சான்றிதழை சரிபார்க்காத 4 விமான நிறுவனங்கள் மீது வழக்கு
மராட்டியத்தில் இருந்து வந்த பயணிகளின் கொரோனா சான்றிதழை சரிபார்க்காத 4 விமான நிறுவனங்கள் மீது வழக்கு டெல்லி அரசு நடவடிக்கை.
3. தேர்தல் முடிந்த பிறகும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த 2 பேர் மீது வழக்கு
தேர்தல் முடிந்த பிறகும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த 2 பேர் மீது வழக்கு.
4. காஞ்சீபுரத்தில் லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 252 வழக்குகளில் முடிவு; தீர்வுத்தொகையாக ரூ.13 கோடி வழங்கப்பட்டது
காஞ்சீபுரத்தில் நடந்த (லோக் அதாலத்) எனும் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ஒரே நாளில் 252 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, தீர்வுத்தொகையாக ரூ.13 கோடி வழங்கப்பட்டது.
5. சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது சப்-இன்ஸ்பெக்டர் கோரிக்கையை ஏற்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற சப்-இன்ஸ்பெக்டரின் கோரிக்கையை மதுரை ஐகோர்ட்டு ஏற்க மறுத்துவிட்டது.