தேசிய செய்திகள்

நிழல் உலக தாதா ரவி புஜாரி மும்பை அழைத்து வரப்பட்டார்; போலீசார் தீவிர விசாரணை + "||" + Gangster Ravi Pujari brought to Mumbai; Police are conducting a serious investigation

நிழல் உலக தாதா ரவி புஜாரி மும்பை அழைத்து வரப்பட்டார்; போலீசார் தீவிர விசாரணை

நிழல் உலக தாதா ரவி புஜாரி மும்பை அழைத்து வரப்பட்டார்; போலீசார் தீவிர விசாரணை
நிழல் உலக தாதா ரவி புஜாரி மும்பை அழைத்து வரப்பட்டார். அவரிடம் வருகிற 9-ந் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க மும்பை கோா்ட்டு உத்தரவிட்டுள்ளது.
செனகலில் கைது
நிழல் உலக தாதா ரவி புஜாரி கடந்த 2019-ம் ஆண்டு செனகல் நாட்டில் கைது செய்யப்பட்டார். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். கர்நாடக போலீசார் பல்வேறு வழக்குகள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். எனவே அவர் பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டு இரு்தார்.

இந்தநிலையில் மும்பை, தானே, நவிமும்பை பகுதிகளில் ரவி புஜாரி மீது 49 தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் குறித்து விசாரிக்க மும்பை போலீசார் ரவி புஜாரியை காவலில் எடுக்க முயற்சி செய்து வந்தனர்.

போலீஸ் காவல்
இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு வில்லேபார்லேயில் உள்ள கஜாலி ஓட்டலில் நடந்த துப்பாக்கியால் சுட்ட வழக்கில் ரவி புஜாரியை விசாரிக்க மும்பை போலீசாருக்கு அனுமதி கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரை அழைத்து வந்து மும்பை சிறப்பு மோக்கா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் கோர்ட்டு அவரை வருகிற 9-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. ரவி புஜாரி கிராபர்டு மார்க்கெட் பகுதியில் உள்ள போலீஸ் தலைமையக லாக்-அப்பில் அடைக்கப்பட உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் லலிதா ஜுவல்லரி கடையில் 5 கிலோ தங்கம் திருட்டு; ஊழியர் மீது சந்தேகம்
சென்னை தியாகராய நகரில் உள்ள லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
2. விடுதி காப்பாளருக்கு பணியிட மாறுதல் வழங்கக்கோரி ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் மீது தாக்குதல்; போலீசார் விசாரணை
விடுதி காப்பாளருக்கு பணியிட மாறுதல் வழங்கக்கோரி ஆதிதிராவிட நலத்துறை கண்காணிப்பாளரை தாக்கிய ஓய்வுபெற்ற ஆதிதிராவிட நலவிடுதி வார்டனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. அசாம் வன பகுதியில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்; பாதுகாப்பு படை வேட்டை
அசாமின் வன பகுதியில் அதிக அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர்.
4. திருப்பூர் அருகே ரெயிலில் அடிபட்டு மனைவியுடன் தொழிலதிபர் பலி
திருப்பூர் அருகே ரெயிலில் அடிபட்டு மனைவியுடன் தொழிலதிபர் பலியானார். அவர்கள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.