மராட்டியத்தில் பதாஞ்சலி நிறுவனத்தின் கொரோனா மாத்திரையை விற்க அனுமதி கிடையாது: மந்திரி அனில் தேஷ்முக்


மராட்டியத்தில் பதாஞ்சலி நிறுவனத்தின் கொரோனா மாத்திரையை விற்க அனுமதி கிடையாது: மந்திரி அனில் தேஷ்முக்
x
தினத்தந்தி 23 Feb 2021 10:02 PM GMT (Updated: 23 Feb 2021 10:02 PM GMT)

மராட்டியத்தில் பதாஞ்சலி நிறுவனத்தின் கரோனில் என்ற கொரோனா மாத்திரையை விற்க அனுமதி கிடையாது என மந்திரி அனில் தேஷ்முக் கூறியுள்ளார்.

கரோனில் மாத்திரை
யோகா குரு பாபா ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனம், கொரோனாவை எதிர்கொள்ளும் திறன் பெற்றது என்ற விளம்பரத்துடன் சமீபத்தில் கரோனில் என்ற மாத்திரையை அறிமுகம் செய்தது. மேலும் இந்த மாத்திரை உலக சுகாதார அமைப்பின் சான்றிதழ் பெற்றது எனவும் கூறி வந்தது. இதற்கு இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தெரிவித்து இருந்தது. மேலும் கரோனில் உலக சுகாதார அமைப்பின் சான்றிதழ் பெற்றதாக கூறப்படுவது பொய் எனவும் கூறியது.

அனுமதியில்லை
இந்தநிலையில் கரோனில் மாத்திரை மராட்டியத்தில் விற்பனை செய்ய அனுமதி கிடையாது என உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உலக சுகாதார அமைப்பு, இந்திய மருத்துவ சங்கம் போன்ற சுகாதார அமைப்புகளின் உரிய சான்றிதழ் இல்லாமல் கரோனில் மாத்திரை விற்பனையை மராட்டியத்தில் அனுமதிக்க முடியாது என கூறியுள்ளார்.

Next Story