ராய்காட் போகர்பாடாவில், நவசேவா 3-வது கட்ட குடிநீர் திட்டம்; உத்தவ் தாக்கரே அடிக்கல் நாட்டினார்


ராய்காட் போகர்பாடாவில், நவசேவா 3-வது கட்ட குடிநீர் திட்டம்; உத்தவ் தாக்கரே அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 23 Feb 2021 10:14 PM GMT (Updated: 23 Feb 2021 10:14 PM GMT)

ராய்காட்டில் உள்ள போகர்பாடாவில் நவசேவா குடிநீர் வினியோக 3-வது கட்ட திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் பன்வெலில் நடந்தது.

இதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். மேலும் துணை முதல்-மந்திரி அஜித்பவார், நகர்புற மேம்பாட்டுதுறை மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-
தண்ணீர் தான் வாழக்கை. நம்மால் பல பொருட்களை தயாரிக்க முடியும். ஆனால் நம்மால் தண்ணீரை உற்பத்தி செய்ய முடியாது. எனவே நாம் இருக்கின்ற தண்ணீரை கவனமாக பயன்படுத்த வேண்டும். ராய்காட்டில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. எனவே தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் முன் திட்டப்பணிகளை முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல துணை முதல்-மந்திரி அஜித்பவார் பேசுகையில், "பொது மக்கள் தற்போது இருக்கும் சூழலையை தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட விதிகளை பொதுமக்கள் கடைபிடித்தால் 2-வது ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய தேவை இருக்காது" என்றார்.

Next Story