தேசிய செய்திகள்

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 56,368 புதிய வீடுகள் கட்ட அனுமதி + "||" + Centre approves 56,368 new houses approved under PMAY(U)

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 56,368 புதிய வீடுகள் கட்ட அனுமதி

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 56,368 புதிய வீடுகள் கட்ட அனுமதி
பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 56,368 புதிய வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
புதுடெல்லி, 

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நகர்ப்புற ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டம், 2015-ம் ஆண்டு ஜுன் மாதம் தொடங்கப்பட்டது. இதன்மூலம், நகர்ப்புற ஏழை மக்களுக்காக இரண்டு கோடி வீடுகளை மார்ச் 2022-க்குள் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் 53-வது மத்திய அனுமதி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. 

இதில் 11 மாநிலங்கள் கலந்து கொண்டன. இந்த கூட்டத்தில் 56 ஆயிரத்து 368 புதிய வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. திட்டத்தின் குறிப்பிட்ட கால வரையறைக்குள் 100 சதவீதம் நிறைவு செய்து, வீடுகளை தகுதிவாய்ந்த திட்ட பயனாளிகளுக்கு வழங்கி விட வேண்டும் என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் துர்கா சங்கர் மிஷ்ரா கேட்டுக்கொண்டார்.