5 மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா இல்லை சான்றிதழ் கட்டாயம் - டெல்லி அரசு உத்தரவு


5 மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா இல்லை சான்றிதழ் கட்டாயம் - டெல்லி அரசு உத்தரவு
x
தினத்தந்தி 24 Feb 2021 5:11 AM GMT (Updated: 24 Feb 2021 5:11 AM GMT)

மராட்டியம், கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 5 மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா தான் இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கு தளர்வுக்கு பின் மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். 

இதனிடையே கடந்த சில நாட்களாக இந்தியாவில் மராட்டியம், கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது. இதனால் அந்தெந்த மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் மராட்டியம், கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 5 மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மராட்டியம், கேரளா, சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலத்தவருக்கு டெல்லி அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. 5 மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும். இது பிப்ரவரி.26 முதல் மார்ச் 15-ம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும்.

இவ்வாறு அதில் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

Next Story