தேசிய செய்திகள்

டெல்லியில் புதிதாக 200 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 2 பேர் பலி + "||" + Corona impact on 200 new people in Delhi: 2 more killed

டெல்லியில் புதிதாக 200 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 2 பேர் பலி

டெல்லியில் புதிதாக 200 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 2 பேர் பலி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,38,373 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 115 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,26,331 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு மேலும் இரண்டு பேர் உயிரிழந்தநிலையில், பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 10,905 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக 1,137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய 5 மாநில மக்கள் டெல்லிக்குள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி கொரோனா இல்லை என்கிற சான்றிதழுடன் வருபவர்கள் மட்டுமே டெல்லிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த கட்டுப்பாடு வருகிற 26-ந்தேதி முதல் மார்ச் 15-ந் தேதி வரை தொடரும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. 5 மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருவதால் டெல்லி அரசு இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் வார இறுதி நாள் ஊரடங்கு அமலுக்கு வந்தது- போலீசார் தீவிர கண்காணிப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இதனால், பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
2. தலைநகர் டெல்லியில் இன்று 19 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
டெல்லியில் இதுவரை இல்லாத உச்சமாக இன்று 19 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: அவசர ஆலோசனை கூட்டத்திற்கு முதல்-மந்திரி கெஜ்ரிவால் அழைப்பு
டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
4. மும்பை-டெல்லியில் நட்சத்திர ஓட்டல்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றம்
மும்பை-டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலையடுத்து, அங்குள்ள 2 நட்சத்திர ஓட்டல்களை கொரோனா வைரஸ் சிகிச்சையளிக்கும் மையங்களாக மும்பை மாநகராட்சி மாற்றியுள்ளது.
5. டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல் - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை