தேசிய செய்திகள்

அரியானா பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து; 3 பேர் பலி + "||" + Haryana: Three persons died, one injured in blast at a cracker factory in Karnal

அரியானா பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து; 3 பேர் பலி

அரியானா பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து; 3 பேர் பலி
அரியானா பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
அரியானா,

அரியானா மாநிலம் கர்னால் எனும் இடத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்ததாகவும்  ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,  வெடி விபத்தில் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நாங்கள் தகவல் அளித்துள்ளோம். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடி விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த போது பயங்கர வெடிவிபத்து: சிறுவன், கர்ப்பிணி உள்பட 4 பேர் கருகி பலி
சிவகாசி அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் சிறுவன், கர்ப்பிணி உள்பட 4 பேர் உடல் கருகி பலியாகினர்.
2. அரியானாவில் முதல்-மந்திரிக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது
அரியானாவில் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
3. அரியானா, மணிப்பூர், தெலுங்கானா மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
அரியானா, மணிப்பூர், தெலுங்கானா மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகி உள்ளது.
4. அரியானா மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிப்பு
அரியானா மாநிலத்தில் வரும் 14-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
5. அரியானாவில் கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 50 பேர் பலி: முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தகவல்
அரியானாவில் கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 50 பேர் பலியாகி உள்ளதாக மாநில முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தெரிவித்தார்.