கொரோனா தடுப்பூசிக்காக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெயர்களை பதிவு செய்யலாம் - அதிகாரிகள் தகவல்


கொரோனா தடுப்பூசிக்காக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெயர்களை பதிவு செய்யலாம் - அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 26 Feb 2021 1:49 AM GMT (Updated: 26 Feb 2021 1:49 AM GMT)

கொரோனா தடுப்பூசிக்காக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் பெயர் விவரங்களை ‘கோ-வின்’இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் 2-ம் கட்டமாக வருகிற 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அத்துடன் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கொரோனா தடுப்பூசி போடும் பயனாளிகள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். இதற்காக ‘கோ-வின்’ இணையதளத்தில் பெயர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அந்தவகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் தடுப்பூசி போடப்படும் 1-ந்தேதி முதலே தங்கள் பெயர் விவரங்களை மேற்படி இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இதைப்போல அருகில் தடுப்பூசி போடும் இடங்களுக்கு நேரடியாக சென்றும் முன்பதிவு செய்ய முடியும் என தடுப்பூசி நிர்வாக அதிகாரிகளில் ஒருவரான ஆர்.எஸ்.சர்மா தெரிவித்தார். இதில் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் தங்கள் நோய் நிலவரம் குறித்த மருத்துவ சான்றிதழையும் பதிவவேற்றம் செய்ய வேண்டும்.

அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாகவும், தனியார் மையங்களில் கட்டணம் செலுத்தியும் தடுப்பூசி போடப்படும் என அரசு அறிவித்து உள்ளது. இதற்கான கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story