பஞ்சரான கார் டயரை கழற்றி மாட்டிய கலெக்டர் ரோகிணி சிந்தூரி - வைரலாகும் புகைப்படம்


பஞ்சரான கார் டயரை கழற்றி மாட்டிய கலெக்டர் ரோகிணி சிந்தூரி - வைரலாகும் புகைப்படம்
x
தினத்தந்தி 27 Feb 2021 12:57 AM GMT (Updated: 27 Feb 2021 12:57 AM GMT)

பஞ்சரான கார் டயரை கலெக்டர் ரோகிணி சிந்தூரி தனே களத்தில் இறங்கி கழற்றி மாட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெங்களூரு,

மைசூரு மாவட்ட கலெக்டராக இருப்பவர் ரோகிணி சிந்தூரி. இவர் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் என பாகுபாடு பார்க்காமல் தவறு செய்தால் தட்டிகேட்பதில் அஞ்சாதவர் என்ற பெயர் பெற்றவர். இவர் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் சொந்த காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது அவரது காரின் டயர் பஞ்சராகி உள்ளது. இதனால் கலெக்டர் ரோகிணி சிந்தூரியே தனது காரில் இருந்த ஜாக்கி உதவியுடன் பஞ்சரான டயரை கழற்றி, மாற்று டயரை மாட்டியுள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த ஒருவர், பெண் ஒருவர் தானே கார் டயரை கழற்றி மாட்டியதை பார்த்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். 

பின்னர் அருகில் சென்று விசாரித்தார். அப்போது முகக்கவசத்தை அகற்றிய கலெக்டர் ரோகிணி சிந்தூரி அவரிடம் பேசியுள்ளார். அப்போது தான் கார் டயரை கழற்றி மாட்டியவர் கலெக்டர் ரோகிணி சிந்தூரி என்பது அந்த நபருக்கு தெரியவந்தது. உடனே அவர் கலெக்டர் தானே நீங்கள் என கேட்டார். அதற்கு கலெக்டர் புன்னகையை உதிர்த்துவிட்டு புறப்பட்டு சென்றார். 

தற்போது இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்ட கலெக்டரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Next Story