தேசிய செய்திகள்

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,792- பேருக்கு கொரோனா + "||" + Kerala's COVID positivity rate drops to 5.14%; 3,792 new cases on Saturday after 73K tests

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,792- பேருக்கு கொரோனா

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,792- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,792- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,792- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மாநிலத்தில் இன்று தொற்று பாதிப்பு கண்டறிய 73,710-  மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புடன்  50 ஆயிரத்து 514- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனாவில் இருந்து 4,650- பேர் இன்று குணம்  அடைந்துள்ளனர்.கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 56 ஆயிரத்து 149- ஆக உயர்ந்துள்ளது.  தொற்றில் இருந்து 10 லட்சத்து 01 ஆயிரத்து 164- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆகும். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 182- ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தொற்று: சுந்தர்.சி உடல்நிலை குறித்து குஷ்பு பதிவு
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் பரவி வருகிறது. நடிகர், நடிகைகளும் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள்.
2. நன்றி பாராட்டும் நடைமன்னன்
உலகையே முடக்கிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று தனது பரவலை தொடங்கி, ஓர் ஆண்டை நிறைவு செய்துவிட்டது. அதன் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இரண்டாவது அலையும் வீச தொடங்கி இருப்பதால் பலரும் பீதியில் இருக்கிறார்கள்.
3. கொரோனா தொற்று 2-வது அலை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வரத்து படிப்படியாக குறைவு ஒரே நாளில் 18 விமானங்கள் ரத்து
கொரோனா தொற்று 2-வது அலை எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
4. மேலும் 9 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார்க்கு கொரோனா
மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.