தேசிய செய்திகள்

சர்தார் பட்டேல் ஸ்டேடியத்துக்கு மோடி பெயர்: மத்திய அரசு மீது சிவசேனா கடும் தாக்கு + "||" + Shiv Sena SLAMS PM Modi & HM Amit Shah over stadium name change; says, 'Insult to Sardar Patel'

சர்தார் பட்டேல் ஸ்டேடியத்துக்கு மோடி பெயர்: மத்திய அரசு மீது சிவசேனா கடும் தாக்கு

சர்தார் பட்டேல் ஸ்டேடியத்துக்கு மோடி பெயர்: மத்திய அரசு மீது சிவசேனா கடும் தாக்கு
ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டதை சிவசேனா விமர்சித்துள்ளது.
மும்பை, 

ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டதை கண்டித்துள்ள சிவசேனா, தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு அரசு பொறுப்பற்று செயல்படுவதற்கான லைசென்ஸ் அல்ல என்று கூறியது.

இதுகுறித்து சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் மத்திய பா.ஜனதா அரசை கடுமையாக சாடி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

அனைத்து மிகப்பெரிய விஷயமும் குஜராத்தில் நடைபெற வேண்டும் என பிரதமர் மோடி- அமித்ஷா தலைமையிலான அரசு நினைக்கிறது. இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவர்கள் இந்த நாட்டை வழிநடத்துகிறார்கள் என்பதை மறந்துவிட்டதாக தெரிகிறது.

ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை மெல்பெர்ன் மைதானம் தான் உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருந்தது. தற்போது பிரதமர் மோடியின் பெயரிட்ட இடம் மிகப்பெரியதாக மாறிவிட்டது.

ஆனால் இந்த நடவடிக்கை சீரற்ற ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இதற்கு முன்னர் ஆமதாபாத் ஸ்டேடியத்திற்கு சர்தார் வல்லபாய் பட்டேலின் பெயரிடப்பட்டு இருந்தது.

கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் அல்லது நேரு குடும்பத்தினர் சர்தார் படேலின் பெயரை அழிக்க முயற்சிப்பதாக பா.ஜனதா குற்றம் சாட்டியது. ஆனால் தற்போது அவரது பெயரை யார் அழிக்க முயற்சிக்கிறார்கள் என்ற உண்மை வெளிவந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறந்த தலைவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர்கள் மகாத்மா காந்தி, பண்டித் நேரு, சர்தார் பட்டேல் அல்லது இந்திர காந்தி ஆகியோரை விட பெரியவர் என்று அவரை பின்தொடர்பவர்கள் நம்பினால், அது குருட்டுத்தனம்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் முழு ஊரடங்குக்கு ஆதரவாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்செய் ராவத் கருத்து
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
2. மும்பை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் சிவசேனா மந்திரி அனில் பரப் பணம் வசூலிக்க கட்டாயப்படுத்தினார்; கைதான போலீஸ் அதிகாரி, நீதிபதிக்கு பரபரப்பு கடிதம்
மும்பை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் பணம் வசூலித்து தரும்படி சிவசேனா மந்திரி அனில் பரப் தன்னை கட்டாயப்படுத்தினார் என்று வெடிகுண்டு கார் வழக்கில் கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசே நீதிபதியிடம் பரபரப்பு கடிதம் வழங்கினார்.
3. சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளராக அரவிந்த் சாவந்த் நியமனம்; சஞ்சய் ராவத் அதிகாரம் பறிப்பு
சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளராக அரவிந்த் சாவந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சஞ்சய் ராவத்தின் அதிகாரம் பறிக்கப்பட்டு உள்ளது.
4. போலீஸ் அதிகாரி சச்சின் வாசேவை சிவசேனா பாதுகாக்கிறது; தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு
என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சச்சின் வாசேவை சிவசேனா பாதுகாப்பதாக தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
5. எம்.எல்.சி.க்கள் நியமன விவகாரத்தில் கவர்னர் ராஜ தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும்; சிவசேனா கூறுகிறது
எம்.எல்.சி.க்கள் நியமன விவகாரத்தில் மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ராஜ தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும் என சிவசேனா கூறியுள்ளது.