தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு - மத்திய அரசு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 Feb 2021 7:47 AM GMT (Updated: 28 Feb 2021 7:47 AM GMT)

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,96,731 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,57,051 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த மாதம் 10 ஆயிரத்துக்கும் குறைவாகவே கொரோனா பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், தற்போது பாதிப்பு 16 ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதன்படி கேரளா, கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், புதிதாக உருவான மொத்த பாதிப்பில் இந்த 6 மாநிலங்களில் இருந்து மட்டும் 86.37% பாதிப்பு பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதற்கான காரணங்களைக் கண்டறியவும், இதுதொடர்பான பயனுள்ள கண்காணிப்பு உத்திகளைப் பின்பற்றுமாறும் அந்தந்த மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் கொரோனா சோதனை, விரிவான கண்காணிப்பு, நேர்மறையான நிகழ்வுகளை கண்டறிந்து உடனடியாக தனிமைப்படுத்துதல் மற்றும் நெருங்கிய தொடர்புகளின் விரைவான தனிமைப்படுத்தல் ஆகியவற்றை மாநில அரசுகள் மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story