மேற்கு வங்காள போலீஸ் ஏ.டி.ஜி.பி.யை மாற்றிய தேர்தல் ஆணையம்


மேற்கு வங்காள போலீஸ் ஏ.டி.ஜி.பி.யை மாற்றிய தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 1 March 2021 1:21 AM IST (Updated: 1 March 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில், 294 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில், 294 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று அங்குள்ள காவல்துறை கூடுதல் இயக்குனரை (ஏ.டி.ஜி.பி.) மாற்றி, தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்கு வங்காள ஏ.டி.ஜி.பி. மற்றும் ஐ.ஜி. (சட்டம்-ஒழுங்கு) ஆக செயல்பட்டவர் ஜாவீத் ஷமிம். இவரை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. இவருக்குப்பதிலாக தீயணைப்பு துறையின் இயக்குனராக பணியாற்றும் ஜக்மோகன், ஏ.டி.ஜி.பி. பொறுப்பிற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story