முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிப்பொருட்களுடன் காரை நிறுத்தியதற்கு ஜெய்ஷ்-உல்-ஹிந்த் அமைப்பு பொறுப்பேற்பு
மும்பையில் உள்ள பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் வெடிப்பொருட்களுடன் மர்ம கார் நிறுத்தப்பட்டு இருந்தது.
மும்பை,
மும்பையில் உள்ள பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் வெடிப்பொருட்களுடன் மர்ம கார் நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும் அதில் இருந்து முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவிக்கு எழுதப்பட்டு இருந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதமும் மீட்கப்பட்டது. எனினும் இந்த சம்பவத்தில் பயங்கரவாத கும்பலுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்படாமல் உள்ளது.
மேலும் எந்த அமைப்பும் இந்த சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்கவில்லை. இந்தநிலையில் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே வெடிப்பொருட்களுடன் காரை நிறுத்தியதற்கு ஜெய்ஷ்- உல்- ஹிந்த் என்ற அமைப்பு பொறுப்பேற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெலிகிராம் சமூகவலைதளத்தில் அந்த அமைப்பு முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே வெடிப்பொருட்களுடன் காரை நிறுத்திய சம்பவத்திற்கு பொறுப்பேற்று உள்ளது. இது சமூகவலைதளத்தில் பரவிய போது போலீசாரின் கவனத்திற்கு வந்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.
Related Tags :
Next Story