மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, பா.ஜனதா போலியான மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது - சீதாராம் யெச்சூரி
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, பா.ஜனதா போலியான மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது என்று சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் இடதுசாரி-காங்கிரஸ் இணைந்த மகா கூட்டணி என மும்முனை போட்டி உருவாகி உள்ளது. மகா கூட்டணியின் கூட்டு பிரசாரம் ஒன்று நேற்று கொல்கத்தாவில் நடந்தது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் பேசும்போது, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைத்தார்.
மாநிலத்தில் இந்த இரு கட்சிகளும் போலியான மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதாகவும், தேர்தலுக்குப்பின் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் மம்தா பானர்ஜி, பா.ஜனதாவுடன் கரம் கோர்ப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே பல ஆண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனாவுக்காக மத்திய அரசு ஏற்படுத்திய ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியைக்கொண்டு பா.ஜனதா கட்சி தேர்தல் சமயங்களில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி வருவதாக குற்றம் சாட்டிய யெச்சூரி, மாநிலத்தில் ஊழல் திரிணாமுல் காங்கிரசையும், பா.ஜனதாவையும் மகா கூட்டணி வீழ்த்தும் எனவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story