கொரோனா தடுப்பூசியை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் போட்டு கொள்ள வேண்டும்; மத்திய சுகாதார மந்திரி வேண்டுகோள்

கொரோனா தடுப்பூசியை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் போட்டு கொள்ள வேண்டும்; மத்திய சுகாதார மந்திரி வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 March 2021 3:18 PM IST (Updated: 1 March 2021 3:18 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசியை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் போட்டு கொள்ள வேண்டும் மத்திய சுகாதார மந்திரி ஹர்ச வர்தன் கேட்டு கொண்டுள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரியில் தொடங்கின.  இதன்படி முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசிகள் போடப்பட்டன.  அடுத்தடுத்து மற்றவர்களுக்கும் தடுப்பூசிகள் போடும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய சுகாதார மந்திரி ஹர்ச வர்தன் கூறும்பொழுது, கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதற்கான முன்பதிவை நான் இன்று செய்து கொள்வேன்.  கொரோனா தடுப்பூசியை நாளை போட்டு கொள்ள திட்டமிட்டு உள்ளேன்.

கொரோனா தடுப்பூசியை 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு துணை வியாதிகளை உடையவர்கள் உள்பட அனைத்து குடிமக்களும் போட்டு கொள்ள வேண்டும் என நான் கேட்டு கொள்கிறேன்.

கொரோனா தடுப்பூசியை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் போட்டு கொள்ள வேண்டும் மத்திய சுகாதார மந்திரி ஹர்ச வர்தன் கேட்டு கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட போட்டு கொள்ள வேண்டும்.  அதனால், நாமும் கொரோனா தடுப்பூசியை முன்பே போட்டு கொள்ள வேண்டும் என்ற தகவலை மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் என அவர் கூறியுள்ளார்.

Next Story