தேசிய செய்திகள்

நாட்டில் 87 சதவீத கொரோனா பாதிப்புகள் 6 மாநிலங்களில் பதிவு + "||" + 87 percent of corona infections in the country are recorded in 6 states

நாட்டில் 87 சதவீத கொரோனா பாதிப்புகள் 6 மாநிலங்களில் பதிவு

நாட்டில் 87 சதவீத கொரோனா பாதிப்புகள் 6 மாநிலங்களில் பதிவு
நாட்டில் 87 சதவீத கொரோனா பாதிப்புகள் 6 மாநிலங்களில் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மராட்டியம், கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தமிழகம் மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் 87.25 சதவீத கொரோனா பாதிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளன.

இதுபற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலம் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 15,510 புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இவற்றில் மராட்டியம் (8,293) அதிக பாதிப்புகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

இதனை தொடர்ந்து கேரளா (3,254) மற்றும் பஞ்சாப் (579) உள்ளன.  இந்தியாவில் மொத்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,68,627 ஆக இன்று உள்ளது.  இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 1.52 சதவீதம் ஆகும்.

மொத்த கொரோனா பாதிப்புகளில் 5 மாநிலங்கள் 84 சதவீதம் அளவுக்கு கொண்டுள்ளன.  இந்தியாவில் மொத்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் மராட்டியம் 46.39 சதவீதமும், கேரளா 29.49 சதவீதமும் கொண்டுள்ளன.

15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையை கொண்டுள்ளன.  மராட்டியம் மற்றும் கேரளா 10 ஆயிரத்திற்கும் கூடுதலான சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையை கொண்டுள்ள வேளையில், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆயிரம் முதல் 10 ஆயிரம் சிகிச்சை பெறுவோரை கொண்டுள்ளன.

இதுவரை நாட்டில் மொத்தம் 1 கோடியே 43 லட்சத்து ஓராயிரத்து 266 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.  60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு வியாதிகளை உடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை போடும் பணிகள் இன்று முதல் தொடங்கி நடந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் 81 பேருக்கு இங்கிலாந்தின் உருமாறிய கொரோனா பாதிப்புகள் உறுதி
ரஷ்யாவில் 81 பேருக்கு இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
2. அசாமில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டரில் 2.7 ஆக பதிவு
அசாமில் இன்று காலை திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
3. டெல்லியில் ஹோலி அன்று 76 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பம் பதிவு
டெல்லியில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை உயரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
4. மிசோரமில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.8 ஆக பதிவு
மிசோரமில் திடீரென மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
5. அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு
அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.