கேரளாவில் மேலும் 1,938- பேருக்கு கொரோனா தொற்று


கேரளாவில் மேலும் 1,938- பேருக்கு கொரோனா  தொற்று
x
தினத்தந்தி 1 March 2021 11:27 PM IST (Updated: 1 March 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,938- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருவது அம்மாநில மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் கேராளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,938- ஆக உள்ளது.  

தொற்று பாதிப்பில் இருந்து 3,475 - கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கேரளாவில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 47,868- ஆக குறைந்துள்ளது. கேரளாவில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 08 ஆயிரத்து 972-ஆக உள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து  இன்று 13 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக கேரளாவில் 4,210- பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பை கண்டறிய இன்று சுமார் 45 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


Next Story