பீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் - நிதிஷ்குமார் அறிவிப்பு
பீகாரில் அனைவருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும், தனியார் மருத்துவமனையிலும் இதனை செலுத்திக்கொள்ளலாம் என்று அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பாட்னா,
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தநிலையில் டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இந்ந்நிலையில், நாடுமுழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் தகுதி படைத்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
பீகாரில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி பணிகள் குறித்து அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் கூறியதாவது:
பீகார் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. பீகாரில் அனைவருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். தனியார் மருத்துவமனையிலும் இதனை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வசதியை மாநில மாநில அரசே ஏற்பாடு செய்து தரும்.
60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 59 வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. மக்கள் தானாக முன் வந்து முறைப்படி பதிவு செய்து கொரோனா தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story