ஐதராபாத்தை சேர்ந்த மருந்து குழுமம் ரூ.400 கோடி கருப்பு பணம் குவிப்பு வருமானவரித்துறை கண்டுபிடிப்பு


ஐதராபாத்தை சேர்ந்த மருந்து குழுமம் ரூ.400 கோடி கருப்பு பணம் குவிப்பு வருமானவரித்துறை கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 2 March 2021 5:41 AM IST (Updated: 2 March 2021 5:41 AM IST)
t-max-icont-min-icon

கணக்கில் காட்டாத வருவாய் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், கடந்த 24-ந் தேதி, வருமானவரித்துறை சோதனை நடத்தியது.

புதுடெல்லி, 

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் பிரபலமான மருந்து குழுமம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் தயாரிக்கும் மருந்துகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனம், கணக்கில் காட்டாத வருவாய் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், கடந்த 24-ந் தேதி, வருமானவரித்துறை சோதனை நடத்தியது. 5 மாநிலங்களில் சுமார் 20 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இதில், மருந்து குழுமம் கணக்கில் காட்டாமல் ரூ.400 கோடி வருவாய் ஈட்டியதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதில், ரூ.350 கோடி வருவாயை மருந்து குழுமம் ஒப்புக்கொண்டது. மேலும், ரூ.1 கோடியே 66 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. அரசு மதிப்பை விட குறைவான விலைக்கு நிலங்கள் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Next Story