மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் 92 தொகுதிகளில் போட்டி


மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் 92 தொகுதிகளில் போட்டி
x
தினத்தந்தி 2 March 2021 8:08 PM IST (Updated: 2 March 2021 8:08 PM IST)
t-max-icont-min-icon

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில் வருகிற 27-ந் தேதி முதல் ஏப்ரல் 29-ந் தேதி வரை 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.

அந்த மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜனதா தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளது.

இதேபோல 3-வது அணியாக இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து உள்ளன. இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு 92 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், “மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் தொடர்பான தொகுதி பங்கீடு குறித்து இடதுசாரிகளுடன் இறுதி செய்யப்பட்டு விட்டது. வேட்பாளர் பட்டியல் அடுத்த 2 தினங்களில் வெளியிடப்படும். நாங்கள் 130 தொகுதி இடங்களை கேட்டோம். ராஷ்டிரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கூட்டணியில் இணைக்க இடங்கள் தேவை என்பதை கருத்தில் கொண்டு 92 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டோம்” என்றார்.


Next Story