தேசிய செய்திகள்

பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம் + "||" + IndiGo flight makes emergency landing in Pak, passenger dead on arrival

பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்

பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்
பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் இந்திய விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரை இறங்கியது.
கராச்சி, 

இந்தியாவின் இண்டிகோ விமானம் ( 6இ1412) ஷார்ஜாவில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரமான லக்னோ நகரத்துக்கு நேற்று வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, 67 வயதான ஹபீப் உர் ரகுமான் என்ற பயணி நெஞ்சு வலியால் தவித்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து விமான சிப்பந்திகள், விமானிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே விமானத்தை அவசரமாக பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகருக்கு திருப்பி தரை இறக்க விரும்பினார். அதற்கான அனுமதியை கோரியபோது, பாகிஸ்தான் வழங்கியது.

அதன்படி, அந்த விமானம் கராச்சி நகரத்தின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் அதிகாலை 5 மணிக்கு அவசரமாக தரை இறக்கப்பட்டது. அங்கு தயார் நிலையில் இருந்த விமான நிலைய டாக்டர்கள் குழு, அந்த பயணிக்கு சிகிச்சை அளிக்க விமானத்துக்குள் சென்றது.

ஆனால் அவரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து போய் விட்டது தெரிய வந்தது. எனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் குழு அறிவித்தது.
கராச்சியில் நடைமுறைகள் முடிந்த பின்னர் அந்த விமானம் காலை 8.36 மணிக்கு ஆமதாபாத் புறப்பட்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியாவில் பாகிஸ்தானியர் உள்பட 13 பேருக்கு மரண தண்டனை; போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது.
2. மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ‘பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டால் சுட்டு கொல்லப்படுவார்கள்’; சர்ச்சையை கிளப்பிய பா.ஜனதா தலைவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
மேற்கு வங்காளத்தின் பிர்பும் மாவட்ட பா.ஜனதா தலைவரான துருவா சகா, நேற்று முன்தினம் நானூரில் பிரசாரம் மேற்கொண்டார்.
3. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆரோக்கியமான நடவடிக்கைகள் - சீனா மகிழ்ச்சி
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆரோக்கியமான நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
4. ஜம்மு காஷ்மீர்: எல்லையில் பாகிஸ்தான் நபர் பிடிபட்டார்
ஜம்மு காஷ்மீரின் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்துக்குரியன் வகையில் உலவிய பாகிஸ்தான் நபர் ஒருவர் பிடிபட்டுள்ளார்.
5. பாக். பிரதமர் இம்ரான் கான் விரைந்து குணம் அடைய விருப்பம் தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விரைந்து குணம் அடைய விருப்பம் தெரிவித்து பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.