மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவில் சேர்ந்தார்


மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவில் சேர்ந்தார்
x
தினத்தந்தி 3 March 2021 6:22 AM IST (Updated: 3 March 2021 6:22 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து பா.ஜனதாவுக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாவுவது தொடர்ந்து வருகிறது.

கொல்கத்தா, 

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் இம்மாத இறுதியில் தொடங்குகிறது. இதையொட்டி, ஆளும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து பா.ஜனதாவுக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாவுவது தொடர்ந்து வருகிறது.

 இந்தநிலையில், பஸ்சிம் பர்த்தாமன் மாவட்டம் பாண்டவேஸ்வர் தொகுதியில் 2 தடவை திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிதேந்திர திவாரி நேற்று பா.ஜனதாவில் சேர்ந்தார். ஹூக்ளி மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மாநில பா.ஜனதா தலைவர் திலீப் கோஷ் முன்னிலையில் அவர் பா.ஜனதாவில் இணைந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்கு பாடுபட விரும்புவதால் பா.ஜனதாவில் இணைந்துள்ளேன். திரிணாமுல் காங்கிரசில் இருந்து பாடுபடுவது சாத்தியம் இல்லை.இவ்வாறு அவர் கூறினாா்.

Next Story