டெல்லியில் பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் கூடியது


டெல்லியில் பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் கூடியது
x
தினத்தந்தி 3 March 2021 4:48 PM IST (Updated: 3 March 2021 4:48 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் இன்று முதல் 5ம் தேதி வரை பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் பாஜகவின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் டெல்லியில் தொடங்கியது. மார்ச் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெள்ளிக்கிழமை இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Tags :
Next Story