இந்தியாவை நம்பர் 1 வல்லரசாக மாற்ற விரும்புகிறோம் - மேற்கு வங்கத்தில் நிதின் கட்கரி பேச்சு
இந்தியாவை நம்பர் 1 வல்லரசு நாடாக மாற்ற பாஜக அரசு விரும்புவதாக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்தார்.
கொல்கத்தா,
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க பாஜக தலைவர்கள் பலரும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் ஜாய்பூரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான நிதின்கட்கரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
"இந்தத் சட்டப்பேரவை தேர்தல் பாஜக, திரிணமூல், காங்கிரஸ், இடதுசாரிகளின் எதிர்காலம் பற்றியது அல்ல. மோடிஜி, அமித்ஷாஜி, ஜே.பி.நட்டாஜி, ராகுல் காந்தி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோரின் எதிர்காலம் பற்றியது அல்ல. இது மேற்கு வங்க மக்களின் எதிர்காலத்தைப் பற்றியது" எனத் தெரிவித்தார்.
மேலும், "பாஜக அரசு மேற்கு வங்கத்தின் பிம்பத்தை மாற்ற விரும்புகிறது. இந்தியாவை நம்பர் 1 வல்லரசாக மாற்ற விரும்புகிறோம்" என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து நாங்கள் (பாஜக) வெளியாட்கள் என்று மம்தா ஜி கூறுகிறார். ஜான் சங்கத்தின் சித்தாந்தத்தின் அடிப்படையில் பாஜக உருவானது அதன் நிறுவனர் மற்றும் எங்கள் உத்வேகம் சியாமா பிரசாத் முகர்ஜி மேற்கு வங்கத்தில் பிறந்தார், பின்னர் நாங்கள் எப்படி வெளிநாட்டவர்கள் ஆக முடியும் என கேள்வி எழுப்பினார்.
Related Tags :
Next Story