தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று மேலும் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல் + "||" + Delhi reports 240 new COVID-19 cases, 3 deaths and 196 recoveries in the last 24 hours, as per Delhi Health Department

டெல்லியில் இன்று மேலும் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்

டெல்லியில் இன்று மேலும் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
டெல்லியில் இன்று மேலும் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,39,921 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,914 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 196 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,27,423 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது 1,584 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை-டெல்லியில் நட்சத்திர ஓட்டல்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றம்
மும்பை-டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலையடுத்து, அங்குள்ள 2 நட்சத்திர ஓட்டல்களை கொரோனா வைரஸ் சிகிச்சையளிக்கும் மையங்களாக மும்பை மாநகராட்சி மாற்றியுள்ளது.
2. டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல் - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
3. கோவை, திண்டுக்கல் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வளிமண்டல சுழற்சி காரணமாக கோவை, திண்டுக்கல் உள்பட 7 மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. தலைநகர் டெல்லியில் இன்று 13 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
டெல்லியில் இன்று ஒரே நாளில் 13,468 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 11,491- பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 11,491- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.