மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,855 பேருக்கு கொரோனா
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,855 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,855 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 79 ஆயிரத்து 185 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல நேற்று 42 பேர் இறந்ததை அடுத்து இதுவரை இறப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்து 280 உயர்ந்தது. இதுவரை மராட்டியத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 20 லட்சத்து 43 ஆயிரத்து 349 பேர் குணமடைந்து உள்ளனர். இதில் நேற்று நோயில் இருந்து விடுபட்ட 6 ஆயிரத்து 559 பேரும் அடங்குவார்கள். 82 ஆயிரத்து 343 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் சதவீதம் 93.77 ஆகவும், இறப்பு விகிதம் 2.40 ஆகவும் உள்ளது. தலைநகர் மும்பையில் புதிதாக 1,121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 28 ஆயிரத்து 742 ஆக உயர்ந்தது. மேலும் 6 பேர் இறந்ததை அடுத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 487 ஆக அதிகரித்தது.
Related Tags :
Next Story